அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
செயற்குழு கூட்டம்:
நமது மாவட்டச் சங்க செயற்குழு கூட்டம்
18-04-2022 அன்று திங்கள் கிழமை காலை 10 மணிக்கு
மாவட்ட தலைவர்.தோழர்.S.சம்மனசு அவர்கள் தலைமையில்
நமது மாவட்டச் சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்:
அஞ்சலி
தலைவர் முன்னுரை
ஆண்டறிக்கை
நிதி நிலை அறிக்கை
சமர்ப்பித்தல்
மாவட்ட மாநாடு
சிறப்பாக நடத்துவதற்க்கான ஆலோசனைகள்,
தலைவரின் அனுமதியுடன்
இதர பிரச்சனைகள்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க தோழமையுடன் வேண்டுகிறோம்.
மாவட்ட
தலைவர், செயலர்.
AIBSNLPWA.
திருநெல்வேலி
மாவட்ட சங்க
6 வது மாவட்ட மாநாடு.
23.04.2022
சனிக்கிழமை
காலை 1000 மணி முதல் மாலை 0400 மணிவரை
பாளையம்கோட்டை மார்க்கெட் திடல் அருகில் உள்ள
சுபம் திருமண மண்டபத்தில்
தோழர். S. சம்மனசு அவர்கள் தலைமையில் நடைபெறும்.
சிறப்புரை.
தோழர். R. வெங்கடாசலம்
மாநில செயலர்,
தோழர். சுந்தரகிருஷ்ணன்
மாநில உதவி செயலர்.
வாழ்த்துரை
Bsnl பொது மேலாளர், மற்றும் துணை மேலாளர்கள்
ஓய்வூதியர் சங்கங்களின், கூட்டமைப்பின்,
அமைப்பாளர்.
தோழர்.
சண்முகசுந்தரராஜ் அவர்கள்.கலந்து கொள்வார்கள்.
காலை 1000 மணிக்கு
கொடியேற்றத்துடன் மாநாடு துவங்கும். அதனால் அனைவரும் 1000 மணிக்குள்ளாக தவறாது கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம
ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தல்
புதியநிர்வாகிகள்
தேர்வு
நடைபெறும்.
அங்கத்தினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள
வேண்டுகிறோம்.
S.சம்மனசு
மாவட்ட தலைவர்
M. பரமசிவன்
மாவட்டசெயலாளர்,
S.பெருமாள்ராஜ்
மாவட்ட பொருளாளர்
மற்றும்
மாவட்ட சங்க நிர்வாகிகள்
நெல்லை மாவட்டம்
We are glad to inform our members that the Dept of Pension and Pensioners' Welfare has identified our Association as a registered Pensioners Association under "Pensioners Portal" a mission mode project under national e-Governance Plan of Govt of India The DoP&PW has issued the letter No F-No 4(4)/2021-P&PW(II)-7311 dated 06-04-2022 (Copy given below)Yours fraternally
P Gangadhara Rao GS.
CLICK HERE TO SEE THE ORDER
தமிழ் மாநில BSNL நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை- உடன்பாடு:
2022 மார்ச், 24-ந்தேதி, தோழர்கள் V.ராமராவ், மாநிலத் தலைவர், R.வெங்கடாசலம், மாநிலச் செயலர், K.முத்தியாலு.,துணைப் பொதுச்செயலர் , S.சுந்தரகிருஷ்ணன், உதவி மாநிலச் செயலர் ஆகியோர் தமிழ்நாடு வட்ட GM (ADMN&HR) அவர்களைச் சந்தித்தனர்.
பல்வேறு SSA-க்களில் குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றின் நிலுவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. CCA அலுவலகத்திற்குத் தேவையான விவரங்கள் சம்பந்தப்பட்டSSA-கள் மூலம் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
ஓய்வூதியம் பெறுவோர் குறைகளை நிவர்த்தி செய்ய SSA அளவில் நோடல் அதிகாரி நியமிப்பது, நிர்வாக கூட்டத்தின் போது ஒவ்வொரு வணிகப் பகுதிக்கும் நோடல் அதிகாரியை நியமிக்கவும், ஓய்வூதியர் சங்கங்களுடன் SSA நோடல் அலுவலகர்கள் சந்திப்பு நடத்தவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
செப்டம்பர் -2019 வரையிலான மருத்துவ பில்கள்/ மருத்துவ அலவன்சுகள் செப்டம்பர்- 2019 வரையிலான நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகும் பட்டுவாடா செய்யப்படாதது குறித்து GM நிதி அவர்களிடம் கூறினோம்.
SSA-க்களில் உள்ள பெறும்பான்மையான பில்கள் ERP-யில் பதிவிடாமலும், புதுப்பிக்கப் படாமலும் இருப்பதே இதற்குக் காரணம். ERP-யில் புதுப்பிப்பதற்கு SSA-க்களுக்கு நிதி, வட்ட அலுவலகத்திருந்து SSA-க்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று GM (நிதி) அவர்கள் கூறினார்.
BSNL MRS CARD -ன் சரண்டர் சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி ஆலோசிக்கப்பட்டது . MRS அட்டையை பென்சனர் ஒப்படைக்கும்போது அதற்கான கடிதம் பென்சனர் தரத் தேவையில்லை. MRS அட்டையை BSNL பெற்றுக் கொண்டு சரண்டர் சான்றிதழை வழங்கும் .
பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண ஒத்துழைத்த BSNL தமிழக வட்ட நிர்வாகத்திற்கு நன்றி.
R. வெங்கடாசலம்,
மாநிலச் செயலர்
A MEETING WITH CGHS INSPECTION TEAM FROM DELHI.
தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஆங்கில உரையின் சுருக்கமான தமிழாக்கம் 👇
நமது ஓய்வூதியர் சங்க GS திரு.கங்காதராவ், திரு. T.S.விட்டோபன் ஆகியோருடன் 22/03/2022 அன்று மாலை தில்லி அடைந்தோம். பின்னர் எங்களுடன் நமது AGS திரு.அனுபம் கௌல் மற்றும் முதிர்ந்த நமது RTOWA, MTNL ஓய்வூதியர் சங்க தலைவர் திரு. பாக்க்ஷி அவர்களுடன் காஷ்மீர்கேட் BSNL IQவில் சந்தித்து நமது ஓய்வூதியம் திருத்தியமைப்பது குறித்து விவாதித்தோம். திரு.பாக்க்ஷி அவர்கள் நமது நிலைப்பாடு ஏற்புடையதாகவும் மற்றும் பல்வேறு முயற்சிகளையும் பாராட்டினார்.
நாங்கள் 23/03/22அன்று பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் திரு. பிரஹலாத் ஜோஷி அவர்களை சந்திக்க அவரது PA தொடர்பு கொண்ட போது, அமைச்சர் அவர்கள் உத்திரகாண்ட் புதிய முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதால் சந்திக்க இயலாது என்ற படியால் அவரை சந்தித்து நமது ஓய்வூதியம் திருத்தியமைப்பு பற்றி விவாதிக்க முடியவில்லை.
நாங்கள் அனைவரும் 23/03/22 அன்று சஞ்சார் பவன் சென்று மெம்பர் (நிதி) திரு. திலீப் பாடியா அவர்களை சந்தித்து நமது ஓய்வூதியம் திருத்தியமைப்பது குறித்து 4பக்கம் விளக்கமான கடிதம் கொடுத்து சுமார் 40 நிமிடங்கள் விவாதித்தோம். மெம்பர் (நிதி) அவர்கள் BSNL ஓய்வூதியம் திருத்தியமைப்பது குறித்து தனது கவனத்தில் இருப்பதாகவும் தக்க முடிவுகள் எடுக்க Establishment பிரிவிலிருந்து அதற்கான முன்மொழிவு(Proposal) கோப்பு வருமாயின் ஆவண செய்வதாக கூறினார். அவரிடம் நாங்கள் தமிழ்நாடு CCAஅவர்கள், நூற்றுக்கணக்கான TM ஓய்வூதியர்களின் ஊதியக்குறைப்பு பற்றியும் அவர்கள் குறைந்த ஓய்வூதியம் பெறுவது பற்றி எடுத்துரைத்து அது களையப்பட வேண்டும் என்று வாதிட்டோம். எங்கள் வாதத்தில் Rule 63(C) of CCS Pensioner Rules 2021 மற்றும் Civil Accounts manual Para 7.3.2 under chapter VII ஆகியவற்றை கோடிட்டுக் காட்டி ஓய்வூபெறும் முன் 24 மாதத்திற்குள் பணியில் ஊதியகுறைபாடுகள் மட்டுமே தவறு இருப்பின் குறைக்க முடியும் என எடுத்துரைத்தோம். மெம்பர் (நிதி) அவர்கள் உடனடியாக Jt CCA அவர்களை அழைத்து ஆவண செய்ய வேண்டினார்.
பின்னர், மெம்பர் (பணியாளர் சேவை) Member(Services) திரு. அசோக் குமார் மிட்டல் அவர்களை சந்தித்து Pension Revision பற்றி எடுத்துரைத்தோம். அவரும் Pension Revision பற்றி முடிவு எடுக்க உள்ளதாக கூறினார். நாங்கள், DDG(Establishment) திருமதி.ரோஷினி சோனி & Director (Estt) திரு.ராஜ் குமார் ஆகியோரை சந்தித்து சுமார் 80 நிமிடங்கள் நம் ஓய்வூதியம் திருத்தியமைப்பது குறித்து நீதிபதி. வெங்கடசாமி அவர்களின் 15/12/1995 உச்சநீதிமன்றம் தீர்ப்பு, கேரளா உயர்நீதிமன்ற 10/02/2010 , 2016 தீர்ப்புகள் மற்றும் அரசாணைகள் ஆகியவற்றுடன் விவாதித்தோம். தில்லி அரசு மின்துறை பொதுத்துறையான பின் ஊழியர்களுக்கு 7th CPC ஊதியம் வழங்கப்பட்டுள்ள முன் உதாரணமாக எடுத்துரைத்தோம். DDG Estt அவர்கள் BSNL ஓய்வூதியம் திருத்தியமைப்பது குறித்து உறுதியான முடிவு எடுக்குமா நிலை உள்ளது என்றும், ஆனால் Fitment Formula மற்றும் 2017க்கு பின் ஓய்வு பெறும் ஊழியர்கள் குறைவான ஓய்வூதியம் பெறும் நிலை ஏற்படுவது எப்படி களையப்பட வேண்டியதற்கு செய்ய வேண்டியவைகளை உறுதிப்படுத்த திட்டங்கள் முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆகவே எங்களின் தில்லி பயணம் ஒரு நல்ல முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.
திரு.பாக்க்ஷி அவர்களும் திரு.அனுபம் கௌல் அவர்களும் தொடர்ந்து மேல் முயற்சிகளில் ஈடுபட உறுதியளித்துள்ளார்கள். நாம் ஓய்வூதியம் மாற்றம் விரைவில் பெறுவது உறுதி.
-D.கோபால கிருஷ்ணன்.
Courtesy: comrade.
P Santhakumar
மொழிபெயர்த்த தோழர் P சாந்த குமார் அவர்களுக்கு நன்றி.
எங்கள் டெல்லியின் கடைசி நாள்
(25-3-2022)
D கோபாலகிருஷ்ணன், VP CHQ , Anupam Koul AGS, T S Vittoban TreasurerCHQ மூத்த தலைவர் தோழர்.
எம்.கே.பாக்சியும் நானும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஸ்ரீ பிரகலாத் ஜோஷிஜியை சந்தித்து உதவி கோரினோம்.
அவர் உடனடியாக MoC-க்கு போன் செய்து, தூதுக்குழுவை சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார்.
எனவே, நாங்கள் மாண்புமிகு MoC ஸ்ரீ அஷ்வின் வைஷ்ணவ்ஜியைச் சந்தித்து, ஓய்வூதியத் திருத்தம் குறித்த கடிதத்தை ஒப்படைத்தோம். அவர் மிகவும் நேர்மறையானவராகவும், கோரிக்கை உண்மையானது என்பதால் உதவுவதாகவும் உறுதியளித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவரிடம் சொன்னபோது, அவர் "மன்னிக்கவும்" என்று கூறினார்.
பின்னர் எலக்ட்ரானிக்ஸ் நிகேதன் டெலிகாம் செயலாளரான ஸ்ரீ ராஜாராமனைச் சந்தித்து நான்கு பக்கங்கள் கொண்ட விரிவான கடிதத்தை அளித்தோம். பிரச்சினை மற்றும் இதுவரை DoT எடுத்த நிலைப்பாடு குறித்து விளக்கினோம். நிறுவனப் பிரிவால் எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டோம்.
பிறகு செயலாளர்.
MoC உடனான எங்கள் சந்திப்பு குறித்தும் அவருக்கு தெரிவித்தோம்.
எத்தனை ஓய்வூதியதாரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று கேட்டார்.
எங்கள் விளக்கத்தைக் கேட்டபின் அவர் கடிதத்தை உறுப்பினர் (எஸ்) க்குக் குறிப்பிட்டார். மேலும் தேவையான நடவடிக்கை எடுத்து எங்களிடம் திரும்பப் பெறுவதாக உறுதியளித்தார்.
பி கங்காதர ராவ் ஜி.எஸ்
OUR VISIT TO DELHI FROM 22-3-2022
Please listen to the voice clip by Com. D Gopalakrishnan VP CHQ regarding PENSION REVISION and other issues.
P Gangadhara Rao GS
CLICK HERE
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்