தோழர் D.கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஆங்கில உரையின் சுருக்கமான தமிழாக்கம் 👇
நமது ஓய்வூதியர் சங்க GS திரு.கங்காதராவ், திரு. T.S.விட்டோபன் ஆகியோருடன் 22/03/2022 அன்று மாலை தில்லி அடைந்தோம். பின்னர் எங்களுடன் நமது AGS திரு.அனுபம் கௌல் மற்றும் முதிர்ந்த நமது RTOWA, MTNL ஓய்வூதியர் சங்க தலைவர் திரு. பாக்க்ஷி அவர்களுடன் காஷ்மீர்கேட் BSNL IQவில் சந்தித்து நமது ஓய்வூதியம் திருத்தியமைப்பது குறித்து விவாதித்தோம். திரு.பாக்க்ஷி அவர்கள் நமது நிலைப்பாடு ஏற்புடையதாகவும் மற்றும் பல்வேறு முயற்சிகளையும் பாராட்டினார்.
நாங்கள் 23/03/22அன்று பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் திரு. பிரஹலாத் ஜோஷி அவர்களை சந்திக்க அவரது PA தொடர்பு கொண்ட போது, அமைச்சர் அவர்கள் உத்திரகாண்ட் புதிய முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதால் சந்திக்க இயலாது என்ற படியால் அவரை சந்தித்து நமது ஓய்வூதியம் திருத்தியமைப்பு பற்றி விவாதிக்க முடியவில்லை.
நாங்கள் அனைவரும் 23/03/22 அன்று சஞ்சார் பவன் சென்று மெம்பர் (நிதி) திரு. திலீப் பாடியா அவர்களை சந்தித்து நமது ஓய்வூதியம் திருத்தியமைப்பது குறித்து 4பக்கம் விளக்கமான கடிதம் கொடுத்து சுமார் 40 நிமிடங்கள் விவாதித்தோம். மெம்பர் (நிதி) அவர்கள் BSNL ஓய்வூதியம் திருத்தியமைப்பது குறித்து தனது கவனத்தில் இருப்பதாகவும் தக்க முடிவுகள் எடுக்க Establishment பிரிவிலிருந்து அதற்கான முன்மொழிவு(Proposal) கோப்பு வருமாயின் ஆவண செய்வதாக கூறினார். அவரிடம் நாங்கள் தமிழ்நாடு CCAஅவர்கள், நூற்றுக்கணக்கான TM ஓய்வூதியர்களின் ஊதியக்குறைப்பு பற்றியும் அவர்கள் குறைந்த ஓய்வூதியம் பெறுவது பற்றி எடுத்துரைத்து அது களையப்பட வேண்டும் என்று வாதிட்டோம். எங்கள் வாதத்தில் Rule 63(C) of CCS Pensioner Rules 2021 மற்றும் Civil Accounts manual Para 7.3.2 under chapter VII ஆகியவற்றை கோடிட்டுக் காட்டி ஓய்வூபெறும் முன் 24 மாதத்திற்குள் பணியில் ஊதியகுறைபாடுகள் மட்டுமே தவறு இருப்பின் குறைக்க முடியும் என எடுத்துரைத்தோம். மெம்பர் (நிதி) அவர்கள் உடனடியாக Jt CCA அவர்களை அழைத்து ஆவண செய்ய வேண்டினார்.
பின்னர், மெம்பர் (பணியாளர் சேவை) Member(Services) திரு. அசோக் குமார் மிட்டல் அவர்களை சந்தித்து Pension Revision பற்றி எடுத்துரைத்தோம். அவரும் Pension Revision பற்றி முடிவு எடுக்க உள்ளதாக கூறினார். நாங்கள், DDG(Establishment) திருமதி.ரோஷினி சோனி & Director (Estt) திரு.ராஜ் குமார் ஆகியோரை சந்தித்து சுமார் 80 நிமிடங்கள் நம் ஓய்வூதியம் திருத்தியமைப்பது குறித்து நீதிபதி. வெங்கடசாமி அவர்களின் 15/12/1995 உச்சநீதிமன்றம் தீர்ப்பு, கேரளா உயர்நீதிமன்ற 10/02/2010 , 2016 தீர்ப்புகள் மற்றும் அரசாணைகள் ஆகியவற்றுடன் விவாதித்தோம். தில்லி அரசு மின்துறை பொதுத்துறையான பின் ஊழியர்களுக்கு 7th CPC ஊதியம் வழங்கப்பட்டுள்ள முன் உதாரணமாக எடுத்துரைத்தோம். DDG Estt அவர்கள் BSNL ஓய்வூதியம் திருத்தியமைப்பது குறித்து உறுதியான முடிவு எடுக்குமா நிலை உள்ளது என்றும், ஆனால் Fitment Formula மற்றும் 2017க்கு பின் ஓய்வு பெறும் ஊழியர்கள் குறைவான ஓய்வூதியம் பெறும் நிலை ஏற்படுவது எப்படி களையப்பட வேண்டியதற்கு செய்ய வேண்டியவைகளை உறுதிப்படுத்த திட்டங்கள் முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆகவே எங்களின் தில்லி பயணம் ஒரு நல்ல முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.
திரு.பாக்க்ஷி அவர்களும் திரு.அனுபம் கௌல் அவர்களும் தொடர்ந்து மேல் முயற்சிகளில் ஈடுபட உறுதியளித்துள்ளார்கள். நாம் ஓய்வூதியம் மாற்றம் விரைவில் பெறுவது உறுதி.
-D.கோபால கிருஷ்ணன்.
Courtesy: comrade.
P Santhakumar
மொழிபெயர்த்த தோழர் P சாந்த குமார் அவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment