EMPANELLED…CGHS …HOSPITALS…CHENNAI
BSNL EMPANELLED HOSPITALS TIRUNELVELI
EMPANELLED… BSNL …HOSPITALS…TIRUNELVELI
MEMBER MOBILE NUMBERS
Saturday, April 30, 2022
அன்புக்குரிய தோழர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம். நமது சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழு சீரும் சிறப்புமாக 28/04/20220 அன்று நடைபெற்றது. செயற்குழு கூட்டத்திற்கு தோழர் ராமராவ் மாநிலத் தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அசோகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இடைப்பட்ட காலத்தில் மறைந்த தலைவர்கள் இலக்கியவாதிகள் விளிம்பு நிலை மனிதர்கள் அனைவருக்கும் ஒரு நிமிட மௌன
அஞ்சலி செய்யப்பட்டது. அடுத்து தோழர் D கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏறத்தாழ ஒரு மணி 45 நிமிட அளவிற்கு அவரது சங்க ரீதியாக சென்ற புதுடெல்லி பயணம் பற்றியும், 22/3/2022 அன்று முதல் 25/3/2022 வரை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், தொலைபேசி துறை அமைச்சர் மற்றும் தொலைபேசி துறை செயலர் மற்றும் பிஎஸ்என்எல் நிர்வாக முதன்மை நிர்வாக இயக்குனர் கே ஆகியவர்களுடாண சந்திப்புகள் பற்றியும், மற்றும் பல அதிகாரிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றியும் சிறப்புடன் எடுத்து வைத்தார். மற்றும் extra increment வழக்கில் நாம் செய்த முயற்சிகளையும் இன்றுவரை ஏற்பட்டுள்ள சாதக பாதக அம்சங்களையும் விரிவாக எடுத்துரைத்தார். ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின்படி நாம் அடையவேண்டிய இலக்கை பற்றியும் அதில் சிறிது அசைவு தெரியுது பற்றியும், இந்த சிறிய அளவிலான தொடக்க புள்ளியானது பெரும் வெளிச்சமாக மாறி நமது சங்க உறுப்பினர்கள் மட்டுமன்றி மற்றவர்களும் பயன் பெறும் அளவிற்கு, வெற்றியை பெருமளவிற்கு நமது சங்கம் பயணிக்கும் திசையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார். மூத்த தோழர் சுகுமாரன் அவர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் பற்றியும் extra increment வழக்கில் அனுதினமும் அவர் நீதிமன்றம் சென்று வழக்கின் போக்கை தெரிந்து வந்ததை செயற்குழுவில் பகிர்ந்து கொண்டார். தொலைபேசி துறை அமைச்சர் பற்றும் ஆகியோர்கள் விஷயத்தின் தன்மையை எளிதில் புரிந்து கொள்வதையும் Principle CCA TN அவர்களின் ஒத்துழைப்பு நல்காத நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துரைத்தார். எளிமையின் சிகரம் தோழர் முத்தியாலு அவர்கள்மீது மேலும் மேலும் உறுப்பினர்கள் சேர்ப்பது அனைத்து நிர்வாகிகள் கடமை என்பதையும் அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்று பெற்று செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். முடிந்தால் நமது சங்க பத்திரிக்கையான Pensioners ' PATRIkAவில் வரும் தகவல்களை மொழிபெயர்த்து உறுப்பினர்களுக்கு தெரிவித்தால் பயனுள்ளதாக அமையும் என்று கூறினார். தான் எந்தக் கூட்டத்திற்கு வந்தாலும் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்பதற்காகவும் அதிலுள்ள பயனுள்ள தகவல்களை நெஞ்சில் நிறுத்திக் கொள்வதாகவும் கூறியது நெகிழ்வுடன் இருந்தது. சென்ற செயற்குழுவிற்கும் நடைபெறும் செயற்குழுவிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சங்க நிகழ்வுகளையும் மற்றும் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளை பற்றியும் விரிவான அறிக்கையை மாநிலச் செயலாளர் அவர்கள் சமர்ப்பித்தார். அது ஒருமனதாக செயற்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆரவாரமும் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதி வழியில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர். வங்கித்துறை அதிகாரிகள், CCATN அதிகாரிகள் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஆகியோருடன் இணக்கமான போக்கும் அதே நேரத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை எந்தவித சமரசமின்றி தீர்ப்பதில் வல்லவர். தமிழ் மாநில உதவித் தலைவர் தோழர் சுந்தர கிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார். விழுப்புரம் தோழர்கள் ஒரு அழகிய நினைவு பரிசினை செயற்குழு உறுப்பினர்களுக்கு வழங்கியது அனைவராலும் பாராட்டப்பட்டது. முதலில் இந்த செயற்குழு வெற்றிகரமாக அமைய மிகுந்த கடுமையான சவாலை ஏற்று சிறப்புடன் பணிபுரிந்த அனைத்து விழுப்புரம் பகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்ட சங்கம் தன் நெஞ்சு நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது."செயற்குழு உறுப்பினர்களின் திருப்தியே எங்களின் கடமை" என்ற குறிக்கோளோடு உழைத்த விழுப்புரம் தோழர்களின் பணியைப் பற்றி " மிக சிறப்பான செயற்குழுவை நடத்திக் கொடுத்த விழுப்புரம் தோழர்களுக்கு வாழ்த்த வார்த்தை பத்தாது' என்று மாநிலச் செயலர் கூறியது பெருமைக்குரிய விஷயமாக கடலூர் மாவட்ட சங்கம் கருதுகிறது. வருகை புரிந்த அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் விழுப்புரம் தோழர்களின் பணியை, உபசரிப்பை, தேனீயைப்போல் சுற்றிவந்து அனைத்து விருந்தினர்களையும் பார்த்துக்கொண்ட பாங்கையும் சிறப்பாக எடுத்துக்கூறி சென்றுள்ளார்கள். இந்த செயற்குழு சிறப்புடன் நடக்க ஒத்துழைப்பு நல்கிய அனைத்து மாவட்ட நிர்வாகிகள், பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கம் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது. குறிப்பாக இரவு பகல் பாராமல் வாகனம் ஓட்டி கடுமையாக பணிபுரிந்த தோழர் அகஸ்டின் மற்றும் டிரைவர் சங்கர் ஆகியோர்களுக்கு மாவட்ட சங்கம் தனது தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. பல்வேறு அதிகாரிகள் ஊழியர்கள், பல்வேறு சங்கங்களின் சங்கமிப்பால் உருவான சங்கம் நமது அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கம் ஆகும். விழுப்புரம் பகுதியின் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் ஒன்றுபட்டு நின்று உழைத்ததால் இந்த செயற்குழு சிறப்பாக முடிந்தது. இனிவரும் காலங்களிலும் இந்த ஒற்றுமையை நாம் பறை சாற்றுவோம். எல்லா புகழும் விழுப்புரம் தோழர்களுக்கே.
நன்றி! நன்றி! நன்றி!
தோழமையுடன்,
R அசோகன்,
AIBSNLPWA Cuddalore.
Wednesday, April 27, 2022
Tuesday, April 19, 2022
Friday, April 15, 2022
செயற்குழு கூட்டம்:
நமது மாவட்டச் சங்க செயற்குழு கூட்டம்
18-04-2022 அன்று திங்கள் கிழமை காலை 10 மணிக்கு
மாவட்ட தலைவர்.தோழர்.S.சம்மனசு அவர்கள் தலைமையில்
நமது மாவட்டச் சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல்:
அஞ்சலி
தலைவர் முன்னுரை
ஆண்டறிக்கை
நிதி நிலை அறிக்கை
சமர்ப்பித்தல்
மாவட்ட மாநாடு
சிறப்பாக நடத்துவதற்க்கான ஆலோசனைகள்,
தலைவரின் அனுமதியுடன்
இதர பிரச்சனைகள்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க தோழமையுடன் வேண்டுகிறோம்.
மாவட்ட
தலைவர், செயலர்.
AIBSNLPWA.
திருநெல்வேலி
மாவட்ட சங்க
6 வது மாவட்ட மாநாடு.
23.04.2022
சனிக்கிழமை
காலை 1000 மணி முதல் மாலை 0400 மணிவரை
பாளையம்கோட்டை மார்க்கெட் திடல் அருகில் உள்ள
சுபம் திருமண மண்டபத்தில்
தோழர். S. சம்மனசு அவர்கள் தலைமையில் நடைபெறும்.
சிறப்புரை.
தோழர். R. வெங்கடாசலம்
மாநில செயலர்,
தோழர். சுந்தரகிருஷ்ணன்
மாநில உதவி செயலர்.
வாழ்த்துரை
Bsnl பொது மேலாளர், மற்றும் துணை மேலாளர்கள்
ஓய்வூதியர் சங்கங்களின், கூட்டமைப்பின்,
அமைப்பாளர்.
தோழர்.
சண்முகசுந்தரராஜ் அவர்கள்.கலந்து கொள்வார்கள்.
காலை 1000 மணிக்கு
கொடியேற்றத்துடன் மாநாடு துவங்கும். அதனால் அனைவரும் 1000 மணிக்குள்ளாக தவறாது கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம
ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தல்
புதியநிர்வாகிகள்
தேர்வு
நடைபெறும்.
அங்கத்தினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள
வேண்டுகிறோம்.
S.சம்மனசு
மாவட்ட தலைவர்
M. பரமசிவன்
மாவட்டசெயலாளர்,
S.பெருமாள்ராஜ்
மாவட்ட பொருளாளர்
மற்றும்
மாவட்ட சங்க நிர்வாகிகள்
நெல்லை மாவட்டம்
AIBSNLPWA.
Tuesday, April 12, 2022
Thursday, April 7, 2022
We are glad to inform our members that the Dept of Pension and Pensioners' Welfare has identified our Association as a registered Pensioners Association under "Pensioners Portal" a mission mode project under national e-Governance Plan of Govt of India The DoP&PW has issued the letter No F-No 4(4)/2021-P&PW(II)-7311 dated 06-04-2022 (Copy given below)
Yours fraternally
P Gangadhara Rao GS.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்

