அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
18-06-2022 அன்று நடைபெற்ற நமது மாவட்ட செயற்குழு கூட்டத்தின் முடிவுகள்:
1) ஆகஸ்ட் 7,8 தேதிகளில் நடைபெறவிருக்கும் நமது மாநில மாநாட்டிற்கு சார்பாளர்களாக கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள் தங்கள் பெயர்களை மாவட்ட சங்கத்திற்கு ஜூன் 30 தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
2) விருப்பம் தெரிவிப்பவர்களில் முதல் 50 பேர் மட்டுமே சார்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்
3.மாநில மாநாட்டிற்கான சார்பாளர் கட்டணம் ரூ.1000/-
நமது சார்பாளர்களுக்கு மாவட்ட சங்கம் ரூ.500/-ஐ ஏற்றுக்கொள்ளும். மீதித் தொகை ரூ.500/-ஐ சார்பாளர்கள் ஜூலை 15-ந் தேதிக்குள் மாவட்ட சங்க அலுவலக்தில் செலுத்திவிட வேண்டும்.
4) மாவட்ட நிதி நிலையை கருத்தில் கொண்டு இனி வரும் பொதுக்குழு கூட்டம் நான்கு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும்.
5)அடுத்த பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி செவ்வாய் கிழமை சுபம் திருமண மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும்.
6) 23-08-2022 அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில்,டிசம்பர் மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் விசாகப்பட்டிணத்தில்
நடைபெறவிருக்கும் நமது அனைத்திந்திய மாநாட்டிற்கான சார்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
6)அனைத்திந்திய மாநாட்டிற்கு,மத்திய சங்கத்தின் வேண்டுகோளின் படி நமது உறுப்பினர்கள் அனைவரும் ரூ.50/-நன்கொடை வழங்கிட வேண்டும்.
7) CCA சென்னை அலுவலகத்திலிருந்து
Mapping Scale கடிதம் அனுப்புவதில் அதிக காலதாமதம் உள்ளது. விரைந்து வழங்கிட வேண்டும் என்ற நமது கோரிக்கை
CCA -அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
8)தென்காசி கிளை, புதிய உறுப்பினர்களுக்கான பகுதி பணத்தை மாவட்ட சங்கத்திற்கு அனுப்பவில்லை என்ற தகவலை,மாவட்ட செயற்குழு, மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறது.
செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றி
AIBSNLPWA
நெல்லை மாவட்டம்.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்