அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
தமிழ் மாநில BSNL நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை- உடன்பாடு:
2022 மார்ச், 24-ந்தேதி, தோழர்கள் V.ராமராவ், மாநிலத் தலைவர், R.வெங்கடாசலம், மாநிலச் செயலர், K.முத்தியாலு.,துணைப் பொதுச்செயலர் , S.சுந்தரகிருஷ்ணன், உதவி மாநிலச் செயலர் ஆகியோர் தமிழ்நாடு வட்ட GM (ADMN&HR) அவர்களைச் சந்தித்தனர்.
பல்வேறு SSA-க்களில் குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றின் நிலுவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. CCA அலுவலகத்திற்குத் தேவையான விவரங்கள் சம்பந்தப்பட்டSSA-கள் மூலம் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
ஓய்வூதியம் பெறுவோர் குறைகளை நிவர்த்தி செய்ய SSA அளவில் நோடல் அதிகாரி நியமிப்பது, நிர்வாக கூட்டத்தின் போது ஒவ்வொரு வணிகப் பகுதிக்கும் நோடல் அதிகாரியை நியமிக்கவும், ஓய்வூதியர் சங்கங்களுடன் SSA நோடல் அலுவலகர்கள் சந்திப்பு நடத்தவும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
செப்டம்பர் -2019 வரையிலான மருத்துவ பில்கள்/ மருத்துவ அலவன்சுகள் செப்டம்பர்- 2019 வரையிலான நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகும் பட்டுவாடா செய்யப்படாதது குறித்து GM நிதி அவர்களிடம் கூறினோம்.
SSA-க்களில் உள்ள பெறும்பான்மையான பில்கள் ERP-யில் பதிவிடாமலும், புதுப்பிக்கப் படாமலும் இருப்பதே இதற்குக் காரணம். ERP-யில் புதுப்பிப்பதற்கு SSA-க்களுக்கு நிதி, வட்ட அலுவலகத்திருந்து SSA-க்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று GM (நிதி) அவர்கள் கூறினார்.
BSNL MRS CARD -ன் சரண்டர் சான்றிதழ் வழங்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி ஆலோசிக்கப்பட்டது . MRS அட்டையை பென்சனர் ஒப்படைக்கும்போது அதற்கான கடிதம் பென்சனர் தரத் தேவையில்லை. MRS அட்டையை BSNL பெற்றுக் கொண்டு சரண்டர் சான்றிதழை வழங்கும் .
பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண ஒத்துழைத்த BSNL தமிழக வட்ட நிர்வாகத்திற்கு நன்றி.
R. வெங்கடாசலம்,
மாநிலச் செயலர்
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment