அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
List of the Pensioners / Family Pensioners whose LC / DLC expiring on 30-06-2022 (status as on 27-06-2022)
CCA Tamilnadu circle has released the names of pensioners whose Life Certificates are getting expired on 30-06-2022. The list contains 10 pages.
A link is given below to see the list.
CLICK THIS LINK WITH YOUR MOUSE POINTER TO SEE THE LIST
நமது சங்கத்தின் மாநில மாநாடு
2022 ஆகஸ்ட் மாதம் 7 , 8 ஆகிய நாட்களில்
சேலம் ,இரும்பு ஆலை மெயின் ரோடு ரெட்டிபட்டி யில்
உள்ள PCC திருமண மண்டபத்தில் நடைபெறும் ,
மாநாட்டை சிறப்பிக்க வரும்
நமது தலைவர்கள்
தோழர்கள்
கங்காதரராவ் ,அகில இந்திய பொது செயலாளர்
நடராஜன் ,அகில இந்திய துணை தலைவர
தங்கராஜ் ,சென்னை தொலைபேசி மாநில செயலர்
அகில இந்திய துணை பொது செயலாளர் வரப்பிரசாத்
மத்திய சங்க துணை தலைவர்கள் கோபாலகிருஷ்ணன்,
சுகுமாரன்
அகில இந்திய துணை பொது செயலாளர் முத்தியாலு
18-06-2022 அன்று நடைபெற்ற நமது மாவட்ட செயற்குழு கூட்டத்தின் முடிவுகள்:
1) ஆகஸ்ட் 7,8 தேதிகளில் நடைபெறவிருக்கும் நமது மாநில மாநாட்டிற்கு சார்பாளர்களாக கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள் தங்கள் பெயர்களை மாவட்ட சங்கத்திற்கு ஜூன் 30 தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
2) விருப்பம் தெரிவிப்பவர்களில் முதல் 50 பேர் மட்டுமே சார்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்
3.மாநில மாநாட்டிற்கான சார்பாளர் கட்டணம் ரூ.1000/-
நமது சார்பாளர்களுக்கு மாவட்ட சங்கம் ரூ.500/-ஐ ஏற்றுக்கொள்ளும். மீதித் தொகை ரூ.500/-ஐ சார்பாளர்கள் ஜூலை 15-ந் தேதிக்குள் மாவட்ட சங்க அலுவலக்தில் செலுத்திவிட வேண்டும்.
4) மாவட்ட நிதி நிலையை கருத்தில் கொண்டு இனி வரும் பொதுக்குழு கூட்டம் நான்கு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும்.
5)அடுத்த பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி செவ்வாய் கிழமை சுபம் திருமண மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும்.
6) 23-08-2022 அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில்,டிசம்பர் மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் விசாகப்பட்டிணத்தில்
நடைபெறவிருக்கும் நமது அனைத்திந்திய மாநாட்டிற்கான சார்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
6)அனைத்திந்திய மாநாட்டிற்கு,மத்திய சங்கத்தின் வேண்டுகோளின் படி நமது உறுப்பினர்கள் அனைவரும் ரூ.50/-நன்கொடை வழங்கிட வேண்டும்.
7) CCA சென்னை அலுவலகத்திலிருந்து
Mapping Scale கடிதம் அனுப்புவதில் அதிக காலதாமதம் உள்ளது. விரைந்து வழங்கிட வேண்டும் என்ற நமது கோரிக்கை
CCA -அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
8)தென்காசி கிளை, புதிய உறுப்பினர்களுக்கான பகுதி பணத்தை மாவட்ட சங்கத்திற்கு அனுப்பவில்லை என்ற தகவலை,மாவட்ட செயற்குழு, மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறது.
செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றி
AIBSNLPWA
நெல்லை மாவட்டம்.
அகிலஇந்தியா BSNL ஓய்வூதியர் நல சங்கத்தின்
7வது மாநில மாநாடு
2022 ஆகஸ்ட் 7 , 8 ஆகிய நாட்களில்
சேலம் மாநகரில்
இரும்பு ஆலை மெயின் ரோட்டில் ,ரெட்டி நகரில்
PCC திருமண மண்டபத்தில் நடைபெறும் .
மாநில ,அகில இந்திய சங்கத்தின் முக்கிய தலைவர்கள்
சகோதர சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் .
சேலம் மாநாட்டு வரவேற்புக்குழு சிறப்பாக
ஏற்ப்பாடுகளை செய்து வருகிறது .
வாழ்த்துக்கள்
இந்த ஆண்டின் 2022 முக்கிய மாநாடுகள்
தமிழ் மாநில மாநாடு
சேலத்தில் 2022 ஆகஸ்ட் 7,8, ஆகிய நாட்களில் நடைபெறும்.
அகில இந்திய மாநாடு
விசாக பட்டினத்தில்
2022 டிசம்பர் 2,3 ஆகிய நாட்களில்
நடைபெறும்.
சார்பாளர்களாக
கலந்து கொள்ள தயாராவோம்.
தோழர்களே ,
தூத்துக்குடி மாவட்ட மாநாடு 30-04-2022 அன்று ஜெயஸ்ரீ கல்யாண மண்டபம் தூத்துக்குடியில் காலை 10-00 மணிக்கு மாவட்ட தலைவர் L .தாமஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
தேசியக்கொடியை மூத்த தோழர் A .மாடசாமி அவர்களும் , சங்கத் கொடியை தோழர் K .முத்தியாலு அ .இ.துணை பொதுச் செயலர் அவர்களும் சங்க கோஷங்கள் விண்ணதிர ஏற்றினார்கள்.
வரவேற்புரையை மாவட்ட பொருளாளர் தோழர் S .பால்சாமி அவர்கள் ஆற்றினார்கள் .துவக்க பேருரையை மாவட்ட இணை செயலர் தோழர் பர்னபாஸ் அவர்கள் ஆற்றினார். தோழர்கள் இசக்கியப்பன் , செல்லத்துரை , மாடசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்க , தோழர்.K .முத்தியாலு அ .இ.து.பொது செயலர் , தோழர் R .வெங்கடாசலம் தமிஸ்மாநில செயலர் , தோழர் N .அம்பிகாபதி தமிழ் மாநில உதவி செயலர் ஆகியோர் நீண்டதொரு உரை நிகழ்த்தினார்கள்.
விழாவில் 70 வயது , 80 வயது பூர்த்தியான தோழர்கள் / தோழியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் .சுவைமிகு மத்திய உணவு க்குப்பின் பொருளாய்வு குழு மதியம் 2-00 மணிக்கு கூடியது. ஆண்டறிக்கை , நிதி நிலை அறிக்கை மற்றும் சேமநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அவை அவையோரால் அங்கிகரிக்கப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் பட்டியல் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
தோழர் கணேசன் ஆடிட்டர் நன்றியுரை வழங்கினார் . மாநாடு மாலை இனிதே முடிவுற்றது.
PENSION ANOMALY CASES
P.Gangadhara Rao GS.
Wednesday, 11 May 2022
ONE INCREMENT CASE LATEST NEWS
One increment case
Today V. Rama Rao Circle president, Sundarakrishnan ACS and myself met PCCA TN and requested him to recommend implementing the CAT orders on extra increment case. He told that he had sent the legal opinion along with judgement which is for going on appeal. Now DOT has to take a decision on that. Since in our own circle it was implemented for more than 6000 pensioners and only about 600 are alone denied, the case should be viewed positively. He replied that even for one person, policy is a policy.
Then we met CCA who told that even though we have sent the legal opinion in favour of appeal, DOT will view it in larger perspective considering the whole country whereas our perspective will be at micro level. They may think that it is localised in TN alone and that too only 600 persons, in a larger perspective they may take decisions to implement the CAT order also. Hence we have to deal the case at DDG Est. level to get it implemented .
Sugumaran .A
28.04.2022 அன்று விழுப்புரத்தில் நடந்த
மாநில செயற்குழுவில்
மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக
மாவட்டம் வாரியாக அங்கத்தினர் எண்ணிக்கை ,
சார்பாளர்கள் எண்ணிக்கை
அறிவிக்கப்பட்டுள்ளது
***
நமது கிளைக்கு
54 சார்பாளர்கள் .
****
மாநாட்டில்
பார்வையாளர்களாக
கலந்து கொள்ள
அனுமதி இல்லை
என் முடிவாகியுள்ளது.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்