PRESIDENT ..M.NAINAR .SDE.. 9443153013.......
SECRETARY..S.GANAPATHI .CAO. 9486106708 ........
DY. SECRETARY...M.PARAMASIVAN .CTS..9486901441.
TREASURER..PERUMALRAJ S..CAO..
9486103301
EMPANELLED…CGHS …HOSPITALS…CHENNAI
BSNL EMPANELLED HOSPITALS TIRUNELVELI
EMPANELLED… BSNL …HOSPITALS…TIRUNELVELI
MEMBER MOBILE NUMBERS
Sunday, December 17, 2023
17-12-2023 ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம்.
மாவட்ட சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் தலைவர் தோழர் சம்மனசு தலைமையில் 1030 மணியளவில் துவங்கியது. சிறப்பு அழைப்பார்களாக BSNL DGM திரு வீராசாமி மற்றும் தோழர் K. முத்தியாலு கலந்து கொண்டனர். தோழர் ஜெயகுமார் வரவேற்புரைக்கு பின் தோழர் கோமதிசங்கர் நீத்தாருக்கு அஞ்சலி செலுத்தினார். தமது உரையில் தலைவர் சம்மனசு அவர்கள் நெல்லை CGHS நல மையத்தினை மேலும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் அங்கு நிலவும் ஆட்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டிய கட்டாயம் பற்றியும் கூறினார். மாவட்ட செயலர் கடந்த ஆகஸ்ட் - டிசம்பர் காலத்திற்குரிய மாவட்ட சங்க செயல்பாடுகள், மாவட்ட சங்கம் எடுத்து தீர்வுகண்ட பிரச்சினைகள், தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றியும், வாழ்நாள் சான்றிதழ் வழங்குவதற்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், சம்பாண் மாற்றத்திற்கு பின்னர் ஓய்வூதியர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள் அதனை தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக பேசினார். நமது மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று சமூகப்பணியின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள்/ முதியோர் இல்லங்களுக்கு நிதியுதவி செய்த நமது உறுப்பினர்களுக்கும், தூய்மை பணியில் பங்கு பெற்றவர்களுக்கும் மாவட்ட சங்கம் சார்பில் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்தார்.
தோழர் K. முத்தியாலு, திரு நகரா அவர்கள் தொடுத்த வழக்கில் வைக்கப்பட்ட அடிப்படை வாத பிரதிவாதங்கள், 17-12-1982ல் வழங்கப்பட்ட தீர்ப்பின் சாராம்சம், அதன் காரணமாக ஓய்வூதியர்கள் பெற்ற பலன்கள் பற்றியும், ஓய்வூதியம் என்பது சலுகை அல்ல அவர்கள் பணியாற்றிய காலத்திற்கான கொடுபடா ஊதியம் என்பதையும் எடுத்து சொன்னார். BSNL ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்த செப்டம்பர் 2000 போராட்டம் அதில் ஏற்பட்ட உடன்பாடுகளின் முக்கியத்துவம், குறிப்பாக 37-A விதிமாற்றம் இவற்றிற்கெல்லாம் காரணமாக இருந்த தோழர் O P குப்தா அவருக்கு துணைநின்ற தோழர் வள்ளிநாயகம் அவர்களின் பங்களிப்பு பற்றியும் கூறினார். இன்றைய நிலையில் CCA அலுவலகத்தின் நிலை அங்கு நிலவும் ஆட்பற்றாக்குறை, ஓய்வூதியர்கள் பிரச்சினைகளில் ஏற்பட்டுள்ள காலதாமதம் சரிசெய்ய நமது சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் விளக்கினார்.
நிர்வாக தரப்பில் பங்கு பெற்ற DGM (Admin) திரு வீராசாமி அவர்கள் 4G தொழில்நுட்ப கட்டமைப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் என்பது பற்றியும். நிதி நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் பேசினார். BSNL வளர்ச்சிக்கு இன்றைய ஓய்வூதியர்களின் அன்றைய பணி பற்றியும் கூறினார்.
பின்னர் 70,80 வயது பூர்த்தியான நமது சங்க உறுப்பினர்களை கதராடை அணிவித்து தோழர் K. முத்தியாலு மற்றும் DGM திரு வீராசாமி அவர்கள் கௌரவப் படுத்தினர். தோழர் ஹரிஹரசுப்பிரமணியன் அவர்கள் நமது மாவட்ட தலைவர்,செயலாளர், பொருளாளர், சிறப்பு அழைப்பாளர் தோழர் K.முத்தியாலு மற்றும் மூத்த தோழர் ரகுபதி இவர்களின் சங்கப்பணி பாராட்டி கதராடை அணிவித்தார்.
தொடர் மழை இருந்தாலும் நமது சங்க அழைப்பினை ஏற்று 180க்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்ட இன்றைய நிகழ்ச்சி தோழர் நயினார் அவர்களின் நன்றியுரைக்குப் பின்னர் நிறைவுற்றது.
வாழ்த்துக்கள்
-----------------------
பாராட்டுக்கள்
------------------------
நன்றி
-----------
அன்புத் தோழர்கள்
தோழியர்கள் அனைவருக்கும்
வணக்கம்.
கன மழை எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல்
ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட
அனைவருக்கும் மிக்க நன்றி.
மிகுந்த சிரமத்திற்கிடையில்
இல்லத்திற்கு சென்றிருப்பீர்கள்.
ஏற்ப்பட்ட சிரமத்திற்கு
மன்னிக்கவும்.
இனி வரும் காலங்களில்
இயற்கை சீற்ற
எச்சரிக்கையையும்
உறுப்பினர்களின்
நலத்தினையும்
கருத்தில் கொண்டு
செயல் படுவோம்
தோழமையுடன்
M.பரமசிவன்
மாவட்ட செயலர்.
Subscribe to:
Post Comments (Atom)
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment