PRESIDENT ..M.NAINAR .SDE.. 9443153013.......
SECRETARY..S.GANAPATHI .CAO. 9486106708 ........
DY. SECRETARY...M.PARAMASIVAN .CTS..9486901441.
TREASURER..PERUMALRAJ S..CAO..
9486103301
EMPANELLED…CGHS …HOSPITALS…CHENNAI
BSNL EMPANELLED HOSPITALS TIRUNELVELI
EMPANELLED… BSNL …HOSPITALS…TIRUNELVELI
MEMBER MOBILE NUMBERS
Thursday, November 2, 2023
01/11/2023 அன்று..
சென்னை Joint CCA Pension அவர்களுடன் சந்திப்பு
கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த திருமதி..அருள்மொழி Joint CCA PVA அவர்கள் அவசரமாக நீதிமன்றம் செல்ல வேண்டிய காரணத்தால் இன்றைய கூட்டத்தில் கலந்து ொள்ளவில்லை.
*
*
இன்று வாழ்வு சான்றிதழ் மேளா நடத்தப்பட்டது. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொள்பவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
*
*
SMPANN மாற்றத்தில்..
பிறந்த தேதி மாற்றம்..
அலைபேசி பதிவேற்றம்..
ஆதார் எண் பதிவேற்றம்..
போன்ற பிரச்சினைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் சரி செய்யப்படும்.
இந்த குறைகளைக் களைவதற்காக நான்கு குறை தீர்க்கும் சாளரங்கள் Counter திறக்கப்படும்.
சென்னைவாசிகள் நேரடியாக தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்.
வெளியூர் தோழர்கள் மின்னஞ்சல் மூலமாக அல்லது தங்களது பிரதிநிதி மூலமாக தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
*
**
CGHS Mapping சான்றிதழ்...
*
அக்டோபர் 15 வரை வந்த விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
*
*
FMA... மருத்துவப்படி..
இதுவரை பெறப்பட்ட 3700 விண்ணப்பங்களில் 2600 பேருக்கு மருத்துவப்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மாதம் 500 விண்ணப்பங்கள் என்ற வகையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் நிலுவை வழங்கப்படவில்லை.
இன்னும் 1000 விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன. டிசம்பர் மாதத்திற்குள் ஒப்புதல் வழங்கப்படும்.
*
*
அடையாள அட்டை...
5000 அட்டைகள் அச்சிடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு 500 அட்டைகள் வந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் மிச்சமுள்ள அடையாள அட்டைகள் வந்து சேரும். சென்னை...கோவை... திருச்சி..மதுரை.. ஆகிய இடங்களில் வாழ்வு சான்றிதழ் மேளா நடக்கும்போது அடையாள அட்டை விநியோகிக்கப்படும்.
சங்கங்கள் இதில் உதவி செய்திட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்படும்.
*
*
வாழ்வு சான்றிதழ் பதிவேற்றம்.
ஆதார் எண் பதிவேற்றம் ஆனவர்களுக்கு இணையதளம் தாமாகவே வாழ்வு சான்றிதழை பதிவேற்றம் செய்து விடும். ஆதார் எண் பதிவேற்றம் ஆகாதவர்களுக்கு தாமதம் ஆகிறது. இது சரி செய்யப்படும்.
2024ம் ஆண்டு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் அனைவரும் வாழ்வு சான்றிதழ் வழங்கும் முறையை அமுல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. மேல் மட்டங்களில் கலந்து ஆலோசித்து முடிவு சொல்வதாக கூறப்பட்டது.
**
78.2 Extra Increment
பிரச்சினை விவாதிக்கப்பட்டது.
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் CCA அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
ஆனாலும் Joint CCA அவர்கள் ஒரு ஆண்டு உயர்வுத்தொகையை குறைத்து விட்டு பிரச்சினையை தீர்ப்பதாக கூறியுள்ளார். வழக்கின் முடிவைப் பொறுத்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
*
*
பல்வேறு மாவட்டங்களில் உள்ள குடும்ப ஓய்வூதிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. ஓய்வூதிய முரண்பாடு மற்றும் SAMPANN மாற்றம் பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன.
*
*
அஞ்சலில் இருந்து SAMPANN இணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டவர்களின் பிறந்த தேதி மற்றும் குறைவான ஓய்வூதியம் உள்ளிட்ட
பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன.
*
*
கூட்டத்தில் புதுவை செயலர் மற்றும் பொருளர்
கலந்து கொண்டனர்.
*
*
தோழமையுடன். .
S.சுந்தர கிருஷ்ணன்..
மாநில செயலர்.
Subscribe to:
Post Comments (Atom)
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment