PRESIDENT ..M.NAINAR .SDE.. 9443153013.......
SECRETARY..S.GANAPATHI .CAO. 9486106708 ........
DY. SECRETARY...M.PARAMASIVAN .CTS..9486901441.
TREASURER..PERUMALRAJ S..CAO..
9486103301
EMPANELLED…CGHS …HOSPITALS…CHENNAI
BSNL EMPANELLED HOSPITALS TIRUNELVELI
EMPANELLED… BSNL …HOSPITALS…TIRUNELVELI
MEMBER MOBILE NUMBERS
Thursday, July 4, 2024
Sunday, May 12, 2024
For Revision Of Pension due to 78.2% IDA Merger
வணக்கம்.
78.2 % IDA உடன் Extra Increment சேர்த்து சில ஓய்வு ஊதியர்களுக்கு, pension revision10.6.2013 முதல் வழங்காதது குறித்து, நமது மத்திய சங்கமும், மாநில சங்கமும் நமது வழக்கில் மாண்பு மிகு சென்னை CAT 17.02.2022 நமக்கு சாதாகமாக நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த பிறகு பலமுறை அன்றைய CCA & PCCA அவர்களை சந்தித்து பேசிய பிறகும் எந்த பயனு மில்லாமல், DOT நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
மீண்டும், மீண்டும் அதிகாரிகள் மாற்றப்பட்ட நேரங்களில் எல்லாம், பல்வேறு கட்டங்களில் PCCA/CCA வை சந்தித்து COM. DG, COM. சுகுமாரன்,மற்றும் CS, RV, Muthialu, ராமராவ் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். ஒரு கட்டத்தில், PCCA மகாராஷ்டிரா ஒப்புக்கொண்ட பின்னரும் எதையும் நிறை வேற்றவில்லை. இறுதியாக நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் Extra Increment கொடுப்பதை தற்பொழுது பரிசீலிக்க இயலாது என்று Jt. CCA கூறினார்.
நமது, பல தடவை முயற்சிக்கு பின்னர் எக்ஸ்ட்ரா increment இல்லாமல் 78.2 சதம் ஓய்வு ஊதிய மாற்றம் கொடுப்பதற்கு 23.02.2024 ஸ்ரீமதி கௌதமி பாலஸ்ரீ JT.CCA PENSION அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். நமது மத்திய சங்க நிர்வாகிகள், டெல்லியில் Member சர்வீஸ் 12.02.2023 அன்றைய சந்திப்பில்,எக்ஸ்ட்ரா increment சேர்த்து 78.2% revision சாதகமாக வரும் என்பதால் நாம் பொறுத்திருந்தோம். மத்திய சங்க வேண்டுகோள் படி, 07.03.2024 அன்று PCCA TN உடன் DOT மூலம் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் Comrades. DG, A. சுகுமாரன், CS கலந்து கொண்டனர். Extra increment உடன் 78.2% மாற்றம் கொடுக்கும் படி கேட்டு கொள்ளப்பட்டது. கடிதம் கொடுத்தோம்.
24.03.2024 அன்று டெல்லியில் இதுபற்றி விவாதிக்க DOT HQrs இல், DDG EST, JTCCA, CMD BSNL, UNDER SECY , DGM Finance DOT, கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதன் பிறகும் நமது மத்திய சங்க நிர்வாகி, DDG EST அணுகி விசாரித்ததில்,DDG அவர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார் . எனவே,தமிழ் மாநில செயலாளர் 10.04.2023 அன்று Jt.CCA சந்தித்து பேசியதில், நீதி மன்றத்தில்அப்பீல் இருப்பதால், DOT HQrs இதில் எந்த Direction கொடுப்பதாக தெரியவில்லை என்பது தெரிய வந்தது.
நமது வேண்டுகோளுக்கிணங்க, Feb24 அன்று கூறியபடி extra increment இல்லாமல், pension revision 78.2% அடிப்படையில் செய்து கொடுப்பதாகவம், ஒரு request லெட்டர் சம்பந்தப்பட்ட வர்கள் கொடுக்கவேண்டும் என்றும் கூறினார். OFFICIAL COMMUNICATION தேவை என்று மாநில சங்கம் கேட்டு கொண்டது. இது தற்காலிக முடிவு. அப்பீல் தீர்ப்புக்கு பின்,increment முடிவு செய்யப்படும். இன்று CCA அலுவலகம் அவர்களது, Website இல் மாதிரி படிவம், பதிவேற்றம் செய்துள்ளனர்.
அதை கீழே கொடுத்துள்ளோம் மாவட்ட செயலர்கள், பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக விண்ணைப்பிக்க சொல்லவும். இணைப்பு எதுவும் தேவை இல்லை. பெயர், PPO NO விவரம் நமக்கு தேவை. இது ஒரு interim relief. அப்பீல் மீது counter reply நமது வழக்கறிஞர் தயார் செய்து வருகிறார். வழக்கு விசயத்தில் Com. சுகுமாரன் அவர்கள் உறுதுணையாக, உள்ளார்.
மாநில சங்கத்தின் நன்றியை Jt. CCA அவர்களுக்கும் மற்றும் அனைத்து கணக்கு அதிகாரிகளுக்கும் தெரிவித்து கொள்கிறோம். காலம், காலமாக இந்த விவகாரத்தில், DOT HQRS டெல்லி இல், நமக்காக தொடர் முயற்சி எடுத்து வருகின்ற மத்திய சங்கத்திற்கும் நமது நன்றியை தெரிவித்து டுக்கொள்கிறோம். இந்த படிவத்தில் தெரியாத விவரம் இருப்பின், அதை பூர்த்தி செய்ய வேண்டாம்.நம்பிக்கை யுடன்,பொறுமை காத்த உறுப்பினர் களுக்கு நன்றி. நன்றி.
S. சுந்தரகிருஷ்ணன்
மாநில செயலர்
Saturday, April 13, 2024
Wednesday, February 28, 2024
Sunday, February 11, 2024
Saturday, February 10, 2024
ஓய்வூதிய மாற்றம்...
தலைநகர் செய்திகள்...
ஓய்வூதிய மாற்றம் சம்பந்தமாக அதிகாரிகள் மற்றும் அமைச்சரை சந்திப்பதற்கு நமது பொதுச் செயலர் உள்ளிட்ட தலைவர்கள் 05/02/2024 அன்று தலைநகர் டெல்லி சென்றனர்.
06/02/2024 அன்று இரவு ஒன்றிய அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி அவர்களை அவரது இல்லத்தில் தலைவர்கள் சந்தித்தனர். அவர் மூலம் நமது துறை அமைச்சர் திரு.அஸ்வின் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் நமது துறை அமைச்சர் பணி நிமித்தம் மிகவும் பரபரப்பாக இருந்ததினால் அவரை நமது தலைவர்கள் சந்திக்க இயலவில்லை
எனவே 09/02/2024 அன்று தொலைத் தொடர்பு செயலரை சந்தித்தனர். அத்துடன் Member Finance, Member Service மற்றும் இயக்குனர் Estt ஆகியோரையும் சந்தித்தனர்.
சந்திப்பின் அடிப்படையில் ஓய்வூதிய மாற்றம் குறித்து
நமது பொதுச் செயலர்
கீழ்க்கண்ட கருத்துகளை
நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
DOT இலாக்கா ஓய்வூதிய மாற்றம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செல்லவில்லை.
இது குறித்து ஓய்வூதிய இலாக்கா DOP மற்றும் செலவின இலாக்கா DOE உடன் ஆலோசனை நடந்துள்ளது.
ஓய்வூதிய மாற்றம் குறித்த கோப்புகள் இன்னும் நிதி அமைச்சக DOE இலாக்காவிற்கு அனுப்பப்படவில்லை. அடுத்த வாரம் அனுப்பப்படலாம்.
ஓய்வூதிய மாற்றம் எந்த கணக்கீட்டின்படி வழங்கப்படுகின்றது என்பதை DOT அதிகாரிகள் வெளிப்படையாக சொல்லவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த அவர்கள் இரண்டு மூன்று வழிமுறைகளை ஆராய்ந்து வைத்துள்ளதாக அறிய முடிகிறது.
BSNL ஓய்வூதிய மாற்றம் என்பது நிரந்தரமான வகையில் ஒன்றிய அரசு ஓய்வூதியர்களுக்கு இணையாக அமைய வேண்டும் என்று DOT உறுதியாக உள்ளது.
ஊதிய மாற்றத்தில் இருந்து ஓய்வூதிய மாற்றத்தை DELINK செய்வதற்கு அரசு Policy Decision கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இதற்கு ஏனைய துறைகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். அதன் பின் ஒன்றிய மந்திரிசபையின் ஒப்புதல் பெற வேண்டும். இந்தப் பணிகள் முடிவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். எனவே புதிய அரசு அமைந்த பிறகே இந்தப் பணி முழுமை பெறும்.
இது குறித்து விளக்கம் அளித்திட நம்முடன் இணைந்து வழக்கு மன்றம் சென்ற சங்கங்களுக்கு அழைப்பு விடப்பட்டது. கால அவகாசம் இல்லாத காரணத்தினால் SNPWA மற்றும் AIRBSNLEWA சங்கப் பிரதிநிதிகள் மட்டும் நமது தலைவர்களை சந்தித்தனர்.
நீதி மன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவது குறித்து நமது சங்கம் அவமதிப்பு வழக்கு தொடுப்பது இல்லை என்று சக சங்கங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நாம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் DOT மேல் முறையீடு செல்லும். இது மேலும் நான்கைந்து ஆண்டு காலத்திற்கு பிரச்சினையை தாமதப்படுத்தும். எனவே மற்ற சங்கங்களும் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
கடந்த 5 நாட்களாக
கடும் குளிரைத் தாங்கிக் கொண்டு வயது முதிர்ந்த காலத்திலும் நமது தலைவர்கள் டெல்லியில் ஓய்வூதிய மாற்றம் குறித்து பல்வேறு பணிகளை செய்துள்ளனர்.
நிச்சயம் அவர்களது
அயராத முயற்சி நமக்கு
நல்ல பலனைக் கொடுக்கும்
தளர்வின்றிப் பணி செய்யும் தலைவர்களுக்கு நமது வாழ்த்துகளும்... வணக்கங்களும்..
Subscribe to:
Posts (Atom)
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்










