PRESIDENT ..M.NAINAR .SDE.. 9443153013.......
SECRETARY..S.GANAPATHI .CAO. 9486106708 ........
DY. SECRETARY...M.PARAMASIVAN .CTS..9486901441.
TREASURER..PERUMALRAJ S..CAO..
9486103301
EMPANELLED…CGHS …HOSPITALS…CHENNAI
BSNL EMPANELLED HOSPITALS TIRUNELVELI
EMPANELLED… BSNL …HOSPITALS…TIRUNELVELI
MEMBER MOBILE NUMBERS
Saturday, February 10, 2024
ஓய்வூதிய மாற்றம்...
தலைநகர் செய்திகள்...
ஓய்வூதிய மாற்றம் சம்பந்தமாக அதிகாரிகள் மற்றும் அமைச்சரை சந்திப்பதற்கு நமது பொதுச் செயலர் உள்ளிட்ட தலைவர்கள் 05/02/2024 அன்று தலைநகர் டெல்லி சென்றனர்.
06/02/2024 அன்று இரவு ஒன்றிய அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி அவர்களை அவரது இல்லத்தில் தலைவர்கள் சந்தித்தனர். அவர் மூலம் நமது துறை அமைச்சர் திரு.அஸ்வின் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் நமது துறை அமைச்சர் பணி நிமித்தம் மிகவும் பரபரப்பாக இருந்ததினால் அவரை நமது தலைவர்கள் சந்திக்க இயலவில்லை
எனவே 09/02/2024 அன்று தொலைத் தொடர்பு செயலரை சந்தித்தனர். அத்துடன் Member Finance, Member Service மற்றும் இயக்குனர் Estt ஆகியோரையும் சந்தித்தனர்.
சந்திப்பின் அடிப்படையில் ஓய்வூதிய மாற்றம் குறித்து
நமது பொதுச் செயலர்
கீழ்க்கண்ட கருத்துகளை
நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
DOT இலாக்கா ஓய்வூதிய மாற்றம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செல்லவில்லை.
இது குறித்து ஓய்வூதிய இலாக்கா DOP மற்றும் செலவின இலாக்கா DOE உடன் ஆலோசனை நடந்துள்ளது.
ஓய்வூதிய மாற்றம் குறித்த கோப்புகள் இன்னும் நிதி அமைச்சக DOE இலாக்காவிற்கு அனுப்பப்படவில்லை. அடுத்த வாரம் அனுப்பப்படலாம்.
ஓய்வூதிய மாற்றம் எந்த கணக்கீட்டின்படி வழங்கப்படுகின்றது என்பதை DOT அதிகாரிகள் வெளிப்படையாக சொல்லவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த அவர்கள் இரண்டு மூன்று வழிமுறைகளை ஆராய்ந்து வைத்துள்ளதாக அறிய முடிகிறது.
BSNL ஓய்வூதிய மாற்றம் என்பது நிரந்தரமான வகையில் ஒன்றிய அரசு ஓய்வூதியர்களுக்கு இணையாக அமைய வேண்டும் என்று DOT உறுதியாக உள்ளது.
ஊதிய மாற்றத்தில் இருந்து ஓய்வூதிய மாற்றத்தை DELINK செய்வதற்கு அரசு Policy Decision கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இதற்கு ஏனைய துறைகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். அதன் பின் ஒன்றிய மந்திரிசபையின் ஒப்புதல் பெற வேண்டும். இந்தப் பணிகள் முடிவதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். எனவே புதிய அரசு அமைந்த பிறகே இந்தப் பணி முழுமை பெறும்.
இது குறித்து விளக்கம் அளித்திட நம்முடன் இணைந்து வழக்கு மன்றம் சென்ற சங்கங்களுக்கு அழைப்பு விடப்பட்டது. கால அவகாசம் இல்லாத காரணத்தினால் SNPWA மற்றும் AIRBSNLEWA சங்கப் பிரதிநிதிகள் மட்டும் நமது தலைவர்களை சந்தித்தனர்.
நீதி மன்றத் தீர்ப்பை அமுல்படுத்துவது குறித்து நமது சங்கம் அவமதிப்பு வழக்கு தொடுப்பது இல்லை என்று சக சங்கங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நாம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் DOT மேல் முறையீடு செல்லும். இது மேலும் நான்கைந்து ஆண்டு காலத்திற்கு பிரச்சினையை தாமதப்படுத்தும். எனவே மற்ற சங்கங்களும் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
கடந்த 5 நாட்களாக
கடும் குளிரைத் தாங்கிக் கொண்டு வயது முதிர்ந்த காலத்திலும் நமது தலைவர்கள் டெல்லியில் ஓய்வூதிய மாற்றம் குறித்து பல்வேறு பணிகளை செய்துள்ளனர்.
நிச்சயம் அவர்களது
அயராத முயற்சி நமக்கு
நல்ல பலனைக் கொடுக்கும்
தளர்வின்றிப் பணி செய்யும் தலைவர்களுக்கு நமது வாழ்த்துகளும்... வணக்கங்களும்..
Subscribe to:
Post Comments (Atom)
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment