PRESIDENT ..M.NAINAR .SDE.. 9443153013.......
SECRETARY..S.GANAPATHI .CAO. 9486106708 ........
DY. SECRETARY...M.PARAMASIVAN .CTS..9486901441.
TREASURER..PERUMALRAJ S..CAO..
9486103301
EMPANELLED…CGHS …HOSPITALS…CHENNAI
BSNL EMPANELLED HOSPITALS TIRUNELVELI
EMPANELLED… BSNL …HOSPITALS…TIRUNELVELI
MEMBER MOBILE NUMBERS
Monday, July 15, 2024
7வது மாவட்ட மாநாடு
நமது சங்கத்தின் 7வது மாவட்ட மாநாடு பாளை சுபம் மண்டபத்தில் 13/07/2024 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டத் தலைவர் தோழர் S.சம்மனசு தலைமையில் துவங்கியது. தேசிய கொடியினை மாநில செயலாளர் தோழர் S. சுந்தரர் கிருஷ்ணன் அவர்களும் நமது சங்க கொடியினை தோழர் சம்மனசுவும் விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே ஏற்றினர். இணை செயலர் S.கணபதி வரவேற்புரைக்குப்பின் துணைச்செயலாளர் திருவேங்கடம் இடைப்பட்ட காலத்தில் காலமான உறுப்பினர்கள், அவர்தம் உறவினர்கள் மற்றும் அரசியல் கலையுலக பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் தலைமை உரையில் சம்மனசு அவர்கள் இன்றைய சூழலில் ஓய்வூதியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், மருத்துவ பில்களில் பணம் பட்டுவாடா செய்வதில் உள்ள தாமதம், நெல்லை CGHS இடமாற்ற பிரச்சனையில் நமது சங்கம் எடுத்த நடவடிக்கைகள், நமது சங்க அலுவலக பிரச்சினையில் நமது தரப்பு நியாயம் பற்றியும் விரிவாக பேசினார். மாவட்ட செயலாளர் M. பரமசிவன் தமது உரையில் சென்ற மாநாட்டிற்கும் இந்த மாநாட்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்கான மாவட்ட சங்க செயல்பாடுகள், BSNL நிர்வாகத்தரப்புடன் மாவட்ட மட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள், மாவட்ட சங்கத்தால் பல்வேறு மட்டங்களில் எடுக்கப்பட்ட ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியர்களின் பிரச்சினைகள், சம்பாண் மாற்றத்திற்கு பின் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தேதி மாற்றங்கள், இது குறித்து மாநில, அகில இந்திய மட்டத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும், நமது மாவட்ட சங்கத்தால் தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் பற்றியும் விவரித்தார். தமது சிறப்புரையில் மாநில செயலாளர் S.சுந்தர் கிருஷ்ணன் நெல்லை மாவட்ட சங்க செயல்பாட்டின் சிறப்பு பற்றியும், ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் பிரச்சினைகள் தீர்க்க மாநில சங்கம் எடுத்த முயற்சிகள், எக்ஸ்ட்ரா இன்கிரிமெண்ட் பெற்ற ஓய்வூதியர்கள் 78.2% ல் ஓய்வூதியம் பெறுவதற்கு ஏற்பட்டுள்ள இடைக்கால ஏற்பாடு, சம்பாண் மாற்றத்திற்கு பின் ஓய்வூதியர்களின் தரவு (data) சரி செய்வது, 7 CPC அடிப்படையில் ஓய்வூதிய மாற்றம் பெறுவதில் இன்றைய நிலை மற்றும் சூழல், மாநில மட்டத்தில் எடுக்கப்பட்டு தீர்வு கண்ட பிரச்சினைகள் பற்றியும் விரிவாக பேசினார்.
தமது வாழ்த்துரையில் நெல்லை மாவட்ட BSNL பொது மேலாளர் திரு S.கிருஷ்ணகுமார் அவர்கள் BSNL வளர்ச்சிக்கு காரணம் இன்றைய ஓய்வூதியர்களின் அன்றைய கட்டுக்கோப்பான பணி மற்றும் அனுபவம் தான் என்பதையும், இத்தகைய கூட்டங்களில் பங்கேற்பது மனமகிழ்ச்சியையும் நிறைவையும் தருவதாக கூறினார். மேலும் தரைவழி தொலைபேசி இயங்கும் காப்பர் லைன்கள் படிப்படியாக காலாவதியாகும் எனவே FTTH தான் பயன்பாட்டில் இருக்கும் ஆகவே அதற்கு மாற வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள மெடிக்கல் பில்களின் இன்றைநிலை பற்றியும் விரிவாக கூறி மாநாடு சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தார். துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) திரு G. வீராசாமி அவர்களின் வாழ்த்து செய்தியினை மாவட்ட செயலாளர் வாசித்தார். தோழர் M. நயினார் ஓய்வூதிய மாற்றத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை அரசியல் ரீதியாகவும் அணுக வேண்டும் என்று கூறினார்.
உணவு இடைவேளைக்குப் பின் தொடர்ந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் M. பரமசிவன் ஆண்டறிக்கையினையும், பொருளாளர் S. பெருமாள்ராஜ் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையினையும் சமர்ப்பித்தனர். இரண்டும் ஏகமனதாக ஏற்கப்பட்டது. அமைப்பு நிலையில் தோழர்கள் தென்காசி செல்லப்பா, திருவேங்கடம், பாபநாசம், ஆரியங்காவு உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலரின் விரிவான உரைக்குப்பின் வரும் காலத்திற்கு உரிய புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஏறத்தாழ 350 உறுப்பினர்கள் பங்கேற்ற மாவட்ட மாநாடு மாவட்ட சங்க ஆலோசகர் தோழர் T.ஆவுடை நாயகம் நன்றி கூற நிறைவுற்றது.
7வது மாவட்ட சங்க மாநாட்டில் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்.
தோழர்/ தோழியர்:
ஆலோசகர்: T.ஆவுடைநாயகம் Sr.AO
கௌரவ தலைவர்: S.சம்மனசு. DE
தலைவர்: M. நயினார் SDE
உதவி தலைவர்கள்:
S.பாபநாசம் OSP
A.T.பாட்ஷா BCR TM
R.கோமதிசங்கர் SDE
T. நம்பி STS
S.சாமிநாதன் TT
T.ஜுவன் JE
S.சுப்புலெட்சுமி STS
மாவட்ட செயலாளர்:
S.கணபதி CAO
இணை செயலர்:
M. பரமசிவன் CTS
உதவி செயலர்கள்:
T. ஜெயகுமார் STS
G. கருப்பசாமி CAO
M.கருடலிங்கம் TA
P. திருவேங்கடம் TT
P.அர்ஜுனன் JTO
P. பிச்சையா TT
N.கணேசன் JE
A.நாகராஜன் OST
M.அபுபக்கர் CTS
சரஸ்வதி பால் STS
பொருளாளர்:
S.பெருமாள்ராஜ் CAO
உதவி பொருளாளர்கள்:
P.பழனிவேல் CTS
V.நடராஜன் OS P
அமைப்பு செயலாளர்கள்:
S.துரைராஜ் DE
ரூபினா ராஜ்குமார் SDE
C.மனோகரன் SDE
K.ராஜேந்திரன் TT
S.ஆனந்தன் TT
V.கணேசன் OST
K.நாகேந்திரன் TM
M. செல்வராஜ…
Subscribe to:
Post Comments (Atom)
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment