அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
25-04-2023 பேரவைக்கூட்டம்
இன்றைய பேரவைக்கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் சம்மனசு தலைமையில் 1030 மணியளவில் துவங்கியது. தோழர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். இடைப்பட்ட காலத்தில் காலமான நமது சங்க உறுப்பினர்கள், அவர்தம் உறவினர்கள், அரசியல், விளையாட்டு, கலைத்துறை பிரமுகர்களுக்கு தோழர் கோமதி சங்கர் அஞ்சலி நிகழ்த்தினார்.
நமது தலைமை உரையில் BSNL ன் இன்றைய நிலை, நிகழ்கால பிரச்சினைகள் சாதாரண மக்கள் சந்திக்கும் இன்னல்கள் பற்றியும், நமது மாவட்ட சங்கத்தின் அலுவல் பணிகள் பற்றியும் விரிவாக கூறினார்.
மாவட்ட இணை செயலர் தோழர் கணபதி மூன்று கட்ட போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறி தமது உரையில் ஓய்வூதிய மாற்றம் குறித்து நமது அகில இந்திய சங்கம் எடுத்த முயற்சிகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், சம்பாண் மாற்றம், குறித்த காலத்தில் வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டியதின் அவசியம்,CGHS மாற்றம், நிலுவையில் உள்ள மெடிக்கல் அலவன்ஸ், தபால் அலுவலகத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பாண் மாற்றம் வருமான வரி தாக்கல் செய்ய உள்ள Option பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 26-08-2023 அன்று நடைபெற உள்ள அடுத்த பேரவைக்கூட்டத்தில் அதிக உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தார்.
அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஜெயராமன் அவர்கள் தமது சிறப்புரையில் ஓய்வூதிய மாற்றத்திற்கு 7th CPC fitment அடிப்படையில் நமது சங்கம் வைத்த கோரிக்கையின் நியாயம், மூன்று கட்ட போராட்டங்களுக்கு பின்னர் DOT இலாகா எடுத்த நிலை பற்றியும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் பிரச்சினைகளில் இன்றைய அரசாங்கத்தின் தவறான அணுகுமுறை அதன் காரணமாக ஏற்பட்டுள்ள தேக்க நிலை பற்றியும் விரிவாக கூறினார். மேலும் OROP பிரச்சினையில் தேர்தலுக்கு முன்னும் பின்னும் அரசாங்கம் எடுத்த பிற்போக்கான நிலை பற்றியும், ஓய்வூதிய மாற்றம் குறித்து நமது சங்கத்தால் போடப்பட்ட வழக்கின் தன்மை, CGHS திட்டம், அதாலத் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். உறுப்பினர் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டிய அவசியம் பற்றியும் கூறினார்.
மத்திய மாநில உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சண்முகசுந்தரராஜ் தமது உரையில் பழைய ஓய்வூதிய திட்டத்தின் அவசியம், கம்யூடேஷன் காலம் குறைக்கப்பட வேண்டியதின் அவசியம், பாராளுமன்ற நிலைக்குழு சிபாரிசுகளை அமல் படுத்தாத மத்திய அரசின் பிற்போக்குதனம், BSNL,வங்கி ஓய்வூதிய மாற்றம் குறித்து பேசினார்.21-07-2023 அன்று நடைபெற உள்ள போராட்டத்திற்கு ஆதரவு வேண்டினார்.
நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் நயினார், மாசானம் மற்றும் தென்காசி செல்லப்பா விவாதங்களில் பங்கேற்றனர்.
தோழர் த. ஆவுடைநாயகம் நன்றி கூற பேரவைக்கூட்டம் நிறைவு பெற்றது.
இன்றைய நிகழ்வில் ஏறத்தாழ 250 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment