அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
பழைய பென்ஷன் திட்டத்திற்கு
திரும்ப மத்திய அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பு
மத்திய ஆயுதப்படை பணியாளர்கள் மற்றும்
பிற மத்திய அரசு ஊழியர்க்குக்கும் இது பொருந்தும்.
புதிய பென்ஷன் திட்டம் 2004 ம் ஆண்டு செயல்முறைக்கு வந்தது.
2003 ஆண்டு டிசம்பர் மாதம் 22 ம் தேதி க்கு முன் விளம்பரப்படுத்தி,
அதன் மூலம் விண்ணப்பித்து ,01.01.2004 க்குப்பின் பணியில்
சேர்ந்தவர்களும் புதிய பென்ஷன் திட்டத்தில்தான் உள்ளனர்.
இவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பழைய பென்சன் திட்டத்த்துக்கு திரும்ப அவர்களுக்கு
ஆகஸ்ட் 31 ம் தேதிவரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய பென்ஷன் திட்டம் மூலம் பங்களிப்பு தொகை வரவு வைக்கப்பட்ட பணியாளர்களின் பங்களிப்பு பணம்,அவர்கள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுத்தால் தனி நபரின் பொது வருங்கால வாய்ப்பு நிதிக்கு மாற்றப்படும்.
மத்திய அரசின் பணியாளர் நல அமைச்சகம் இது தொடர்பான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment