அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
இரண்டாம் நாள் தர்ணா
நமது அனைத்திந்திய சங்க வேண்டுகோளுக்கு இணங்க திருநெல்வேலி GM அலுவலக வளாகத்தில் தர்ணா நடைபெற்றது.
இன்றைய தர்ணா தோழர்கள் T ஆவுடைநாயகம் மற்றும் N நயினார் முன்னிலையில் தோழர் S. சம்மனசு தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தோழர் பரமசிவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நமது மாவட்ட சங்கத்தின் செயல்பாடு பற்றியும் கூறினார்.
சிறப்பு அழைப்பாளர் மாநில சங்க உதவி தலைவர் தோழர் M பாலன் நமது போராட்டத்தின் நோக்கம் மற்றும் அதற்கான காரணத்தையும் நாம் பென்ஷன் பெற்ற வரலாறு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
முன்னாள் NFTE மாவட்ட செயலாளர் தோழர் கணேசன், தோழர் N நயினார் நமது போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.
கோரிக்கை முழக்கங்களை தோழர்கள் T ஜெயகுமார், N நயினார், S கணபதி மற்றும் ரங்கன் எழுப்பினர். இன்றைய தர்ணாவில் கிட்டத்தட்ட 250 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இணைசெயலர் கணபதி நன்றி கூற இன்றைய நிகழ்வு நிறைவு பெற்றது.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment