அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
*19.12.2022 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
7வது CPC அடிப்படையில் 2.51fitment படி BSNL / MTNL ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க கோரி மத்திய அரசு மற்றும் DoT நிர்வாகத்தை வலியுறுத்தி மத்திய சங்க அறைகூவலுக்கு இணங்க இன்று காலை 10.30 மணியளவில் GM அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் S சம்மனசு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் M. பரமசிவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நமது ஓய்வூதிய உயர்வின் நியாயத்தை வலியுறுத்தி தோழர்கள் N நயினார் மற்றும் E கனகராஜ் பேசினர். BSNL ஊழியர்கள் ஓய்வூதியம் பெற காரணமாக இருந்த நிகழ்வுகள் மற்றும் இன்றைய கோரிக்கையின் நியாயம் பற்றி அகில இந்திய அஞ்சல் மற்றும் RMS ஓய்வூதிய சங்கம் & திருநெல்வேலி மாவட்ட மத்திய மாநில அரசு மற்றும் வங்கி பொதுத்துறை நிறுவன ஓய்வூதிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் K.சண்முக சுந்தர்ராஜ் எடுத்துரைத்து வருங்காலத்திலும் அவர்களின் ஆதரவு தொடரும் எனவும் கூறினார். கோரிக்கை முழக்கங்களை தோழர்கள் கணபதிராமன், ஜெயகுமார் மற்றும் சண்முக சுந்தர்ராஜ் எழுப்பினர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறி தோழர் S. கணபதி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment