அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
நமது மாவட்ட சங்கத்தின் பொதுக்குழு
மற்றும்
சங்க அமைப்பு தினம் 23.08.2022
பாளை சுபம் திருமண மண்டபத்தில்
தலைவர் தோழர் S சம்மனசு தலைமையில் நடைபெற்றது.
தோழர் கணபதி வரவேற்புரைக்குப் பின்னர்
இடைப்பட்ட காலத்தில் காலமான நமது சங்க உறுப்பினர்கள்
அவர்தம் உறவினர்கள், அரசியல் சமுதாய தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நமது மாவட்டத்தில் நமது சங்கம் தொடங்கப்பட்ட நாள் தொடங்கி
இது நாள் வரையிலான வளர்ச்சி பற்றியும் அதற்கு காரணமானவர்கள்
பற்றி தலைமையுரையில் தலைவர் சம்மனசு எடுத்துரைத்தார்.
இன்றைய தேதியில் உறுப்பினர் எண்ணிக்கை 1400க்கு மேல் எனவும் கூறினார்.
பின்னர் சேலம் மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட தோழர்கள் E. கனகராஜ், S.சம்மனசு கௌரவிக்கப்பட்டனர். மாநில துணை செயலர்
தோழர் N.அம்பிகாபதி நமது சிறப்புரையில் சேலம் மாநாட்டு நிகழ்வுகளை
விரிவாக கூறினார். ஓய்வூதியர் ஊதிய மாற்றம், எக்ஸ்ட்ரா இன்கிரிமென்ட்,
78.2 % ஊதிய மாற்றம் இவைகளில் நமது சங்க சாதனை பற்றியும் ஓய்வூதியர் சங்க ஒற்றுமை மற்றும் சங்க உறுப்பினர் எண்ணிக்கை உயர்த்த வேண்டிய அவசியம் பற்றியும் கூறினார்.
சிறப்பு அழைப்பாளர் தோழர் K. சண்முகசுந்தர ராஜ் CGHSல் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் அதில் நமது உரிமைகள் பற்றி கூறினார். CGHSக்கு செலுத்த வேண்டிய பணம் ஒரேமாதிரி இருக்கும் போது நமக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் எனவும் அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம் எனவும் கூறினார்.
நமது சங்க வளர்ச்சி பற்றியும் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய அவசியம் பற்றியும் நமது உரையில் தோழர் கனகராஜ் தெரிவித்தார்.
இடைப்பட்ட காலத்தில் நமது மாவட்ட சங்கம் தீர்வு கண்ட பிரச்சினைகள் சங்க அலுவலக நடவடிக்கைகள் பற்றி நமது செயலர் தோழர் M பரமசிவன் விரிவாக எடுத்துக் கூறினார்.
நிதி நிலை பற்றி பொருளாளர் தோழர் பெருமாள் ராஜ் சமர்ப்பித்தார்.
அம்பை தோழர் கணபதிராமன் மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகளை பாராட்டி வாழ்த்தினார். இன்றைய கூட்டத்தில் 250பேர் கலந்து கொண்டனர். வழக்கத்தை விட குறைவு எனவும் அடுத்த கூட்டத்தில் இதைவிட அதிக அளவில் உறுப்பினர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தோழர் R கோமதி சங்கர் நன்றி உரைக்குப் பின் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment