அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
.சங்க அமைப்பு தினம்.
21/ 08 / 2021
நெல்லை மாவட்ட சங்கத்தின் சார்பாக, தோழர் S. சம்மனசு அவர்கள் தலைமையில் GM அலுவலக வாளாகத்தில் நடைபெற்றது.
காலை 1030 மணிக்கு தோழர் M. நைனார், retd. Sde, FNTO வின் மாநில துணை செயலர் சங்க கொடியினை ஏற்றினார்.
பின்னர் 1100.மணிக்கு சங்க அலுவலகத்தில் நெல்லை பகுதியில் உள்ள மாவட்ட சங்க நிர்வாகிகள், மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து கொண்ட செயலக க்கூட்டம். நடைபெற்றது.
தலைமை உரைக்குப்பின் தோழர் M. பரமசிவன் மாவட்ட செயலர் கொரானா தொற்றின் காலத்தில் நமது சங்க செயல்பட்டதனை யும், உறுப்பினர்கள் தொலை பேசியில் தெரிவித்த பிராட்சணைகளை தாமே முடிந்தவரை நிவர்த்தி செய்த தனையும், மாநில செயலரிடம் தொலைபேசியில் பேசி மாநில மட்டத்தில் தீர்க்கவேண்டிய பிராட்சணைகளை மாநிலச்செயலாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதனையும் மாநில செயலரும் உடன் நிவர்த்தி செய்ததனை எடுத்துகூறினார்.
செப்டம்பரில் நடக்கும் அதாலாத் கூட்டத்திற்கு நமது சங்கத்தின் மூலம் அனுப்பிய பிரட்சனைகள் பற்றியும் MRS & CGHS ன் இன்று இருக்கும் நிலை பற்றியும் விரிவாக பேசினார்.
பின்னர் அஞ்சலி பின்
தோழர் M. நைனார் அவர்கள் தொழிற்சங்கத்தின் இன்றைய நிலை, அரசின் நிலைப்பாடு பற்றி விரிவாக பேசினார்.
அடுத்து பேசிய தோழர். கனகராஜ் அவர்கள் நெல்லையில் 2007 ல் 46 அங்கத்தினர்களுடன் சங்கத்தை ஆரம்பித்தனையும் இன்று நாம் வளர்ந்து வந்தது, அன்று நம்மை அதிகாரிகள் நடத்திய விதமும் இன்று நம்மை அதிகாரிகள் நடத்தும் விதமும், சங்கத்தின் செயல்பாட்டினை கண்டுதான் எனவும் எடுத்துறைத்தார். மாவட்ட செயற்குழு நடத்த முயற்சிக்கவேண்டும் எனவும் பேசினார்.
தோழர். பழனிவேல் அவர்கள் கனகராஜ் அவர்கள் சங்கத்தினை ஆரம்பிக்கும் பொழுது நானும் அதில் பங்குக்கொண்டேன் என பேசினார்.
இறுதியில் நன்றிக்கூறளுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment