அகில.இந்திய.BSNL.ஓய்வூதியர் நலச்சங்கம்..........திருநெல்வேலி..
நன்றி சென்னை தொலைபேசி இணையதளம்
நமது CHQ VP தோழர் DG அவர்கள்
கீழ்க்கண்ட தகவலை தெரியப்படுத்தினார்கள்.
நமது தமிழ் மாநில அலுவலக AGM Welfare திரு. குமார் அவர்கள், புதுதில்லி BSNL தலைமை அலுவலக DGM திரு ராஜுவ் குமார் அவர்களைத் தொடர்பு கொண்ட போது மெடிக்கல் அலவன்ஸ் குறித்து கீழ்க்கண்ட தகவலை உறுதி செய்துள்ளார்.1. ஏற்கனவே மெடிக்கல் அலவன்ஸ் குறித்து விருப்பம் தெரிவித்த ஊழியர்கள்/ அதிகாரிகள் மீண்டும் விருப்ப கடிதம் கொடுக்க வேண்டாம்.
2. ஏற்கனவே கொடுத்த விருப்பத்தில் ஏதேனும் மாற்றம் தேவைப்படின் அதாவது(a) வவுச்சர் கொடுத்து வாங்குபவர் வவுச்சர் கொடுக்காமல் வாங்க வேண்டும் எனில்(b) வவுச்சர் கொடுக்காமல் வாங்குபவர் வவுச்சர் கொடுத்து வாங்க வேண்டும் எனில்
(3) வங்கி கணக்கு மற்றும் IFSC யில் மாற்றம் இருந்தால்
(4) ஓய்வூதியர்கள் காலமாகிவிட்ட சூழலில் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது வங்கி விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட அலுவலகங்களுக்கு மேற்கண்ட தகவல் இன்னும் ஓரிரு தினங்களில் மாநில அலுவகத்திலிருந்து தெரிவிக்கப்படும். அதுவரை நமது தோழர்கள் காத்திருக்க வேண்டும்.
மெடிக்கல் அலவன்ஸ் பெறுவதில் மாற்றம் தேவைப்படுபவர்கள் மற்றும் வங்கி கணக்கில் மாற்றம் இருப்பவர்கள் மட்டும் விருப்ப கடிதம் கொடுக்க வேண்டும்.
இத்தகைய தகவல் WhatsApp, மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்புகின்ற கடிதமென ஏதாவது ஒரு வகையில் இருக்கும்.
STR மற்றும் மாநில தலைவர் AIBSNLPWA Ch TD க்கு தெரிவிக்க பட்டுவிட்டது.
AGM Welfare மாநில அலுவலகம் அவர்களுடன் நடந்த உரையாடலின் போது நமது தமிழ் மாநில செயலரும் உடனிருந்தார்.
CHQ க்கு நமது நன்றி...சுந்தரகிருஷ்ணன்.ACS..
மாவட்ட மாநாட்டு புகைப்படங்கள்
No comments:
Post a Comment